பிரதமர் அலுவலகம்
மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
27 JUL 2025 9:40AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கும் அதன் நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "மிகவும் சோதனையான சூழ்நிலைகளில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தங்கள் கடமை, தைரியம் மற்றும் உறுதியான அர்ப்பணிப்புக்காக முத்திரை பதித்துள்ளனர்" என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிடுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"அனைத்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கும் எழுச்சி தின வாழ்த்துகள். இந்த படை நமது பாதுகாப்பு எந்திரத்தில், குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சவாலான அம்சங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மிகவும் சோதனையான சூழ்நிலைகளில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தங்கள் கடமை, தைரியம் மற்றும் உறுதியான அர்ப்பணிப்புக்காக முத்திரை பதித்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையிலான சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது."
***
(Release ID: 2148975)
AD/SM/RJ
(रिलीज़ आईडी: 2149023)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam