இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கார்கில் வெற்றி தின பாதயாத்திரைக்கு மை பாரத் இளம் தொண்டர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
25 JUL 2025 11:12AM by PIB Chennai
1999-ம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 26-வது ஆண்டினை குறிக்கும் வகையில் கார்கில் பகுதியில் திராசில் 2025 ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தின பாதயாத்திரை நடைபெறவுள்ளது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆதரவில் மை பாரத் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்தப் பாதயாத்திரை நடைபெறும். பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மற்றும் ஆயிரம் இளைஞர்கள், மூத்த ராணுவ வீரர்கள், போர்த் தியாகிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக உறுப்பினர்கள் இதில் பங்கேற்பார்கள்.
திராசில் உள்ள ஹிமாபாஸ் பொது உயர்நிலைப்பள்ளி திடலில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த பாதயாத்திரை 1.5 கிமீ தூரத்தைக் கடந்து பீம்பேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் நிறைவடையும்.
பாதயாத்திரையைத் தொடர்ந்து 100 இளம் தொண்டர்களுடன் கார்கில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் அங்கு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மோட்டார் பைக் பயணத்தை போர் நினைவுச் சின்னத்தில் நிறைவு செய்யும் சக்தி உத்கோஷ் அறக்கட்டளையைச் சேர்ந்த 26 பெண்களை அமைச்சர் பாராட்டுவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148197
***
AD/SMB/SG/KR
(Release ID: 2148341)