பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேகாலயா மாநிலம் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றத்தைப் பாராட்டி பிரதமர் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUL 2025 4:39PM by PIB Chennai

சுற்றுலா, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், பெண்கள் தலைமையிலான சுய உதவிக்குழுக்கள், பிரதமரின் மேற்கூரை சூரிய மின் சக்தி வீடுகள் திட்டம், துடிப்பான கிராமத் திட்டம் போன்ற முன்முயற்சிகளால் மேகாலயாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சுற்றுலா, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், பெண்கள் தலைமையிலான சுய உதவிக்குழுக்கள், பிரதமரின் மேற்கூரை சூரிய மின் சக்தி வீடுகள் திட்டம், துடிப்பான கிராமத் திட்டம் போன்ற முன்முயற்சிகளால் மேகாலயாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ( @nsitharaman ) எடுத்துக்காட்டியுள்ளார். வலுவான அரசின் ஆதரவு, துடிப்பான சமூக மனப்பான்மை ஆகியவற்றுடன், இந்த மாநிலம் உறுதித் தன்மையும் தன்னம்பிக்கையும் கொண்ட இந்தியாவிற்கான ஒரு உதாரணமாக விளங்குகிறது."

*****

(Release ID: 2146224)

AD/TS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2146228) வருகையாளர் எண்ணிக்கை : 36