பிரதமர் அலுவலகம்
கொரியக் குடியரசின் சிறப்புத் தூதர்கள் குழு, பிரதமருடன் சந்திப்பு
Posted On:
17 JUL 2025 6:40PM by PIB Chennai
திரு. கிம் பூ கியூம் தலைமையிலான கொரிய குடியரசின் சிறப்புத் தூதர்கள் குழு, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தது.
இந்த நிகழ்வின்போது, கொரிய குடியரசின் அதிபர் திரு. ஜெய்மியுங் லீ உடனான தனது சமீபத்திய நேர்மறையான சந்திப்பை நினைவு கூர்ந்த பிரதமர் திரு மோடி, அதன் 10வது ஆண்டைக் குறிக்கும் இந்திய-கொரிய சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். புதுமை, பாதுகாப்பு, கப்பல் கட்டுதல் மற்றும் திறமையான இயக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூட்டாண்மையின் தொடர்ச்சியான வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் குறிப்பிட்டதாவது:
“திரு. கிம் பூ கியூம் தலைமையிலான கொரிய குடியரசின் சிறப்புத் தூதர்களின் குழுவை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த மாதம் அதிபர் திரு. ஜெய்மியுங் லீ @Jaemyung_Lee உடனான எனது நேர்மறையான சந்திப்பை நினைவு கூர்ந்தேன். 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்திய-கொரிய சிறப்பு உத்திசார் கூட்டாண்மை, புதுமை மற்றும் பாதுகாப்பு முதல், கப்பல் கட்டுதல் மற்றும் திறமையான இயக்கம் வரை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.”
----
(Release ID: 2145593)
AD/RB/DL
(Release ID: 2145658)
Visitor Counter : 4
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam