வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2024-25-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 ஜூலை 17 அன்று வழங்கவுள்ளார்
Posted On:
15 JUL 2025 12:50PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், 2025 ஜூலை 17 அன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024-25 ஆண்டுக்கான மதிப்புமிக்க தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்க உள்ளார். மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், மத்திய இணையமைச்சர் திரு. டோக்கன் சாஹு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
தூய்மை கணக்கெடுப்பு 2024-25 என்பது உலகின் மிகப்பெரும் நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பாக உள்ளது. இது 9-வது பதிப்பாகும். இந்த மைல்கல் நிகழ்வு, நகர்ப்புற இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்து எடுத்துரைக்கும்.
இது தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் இயக்கத்தின் கீழ், நகரங்களின் அயராத முன் முயற்சிகளை அங்கீகரிக்கிறது. இந்த ஆண்டு, சூப்பர் தூய்மை நகரங்கள், மக்கள் தொகை அடிப்படையில் 3 சுத்தமான நகரங்கள், சிறப்பு வகை பிரிவில், கங்கா நகரங்கள், கண்டோன்மென்ட் வாரியங்கள், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு, மகா கும்பமேளா, மாநிலம், யூனியன் பிரேதங்களில் உள்ள சுத்தமான நகரங்கள் உள்பட 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படும்.
2024-25 தூய்மை கணக்கெடுப்பு விருதுகளுக்காக, 3,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு வார்டிலும் 45 நாட்கள் முழுமையான ஆய்வுகளை நடத்தினர். இந்த முயற்சி தேசிய அளவில் நகர்ப்புற வாழ்க்கை மற்றும் சுகாதாரத்தைப் புரிந்து கொள்ளும் வகையில், விரிவான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144802
***
AD/TS/SM/GK/AG/KR
(Release ID: 2144871)
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam