சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹஜ் 2026-க்கான விண்ணப்ப நடைமுறையை இந்திய ஹஜ் குழு தொடங்கியது

Posted On: 08 JUL 2025 2:11PM by PIB Chennai

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஹஜ் குழு, முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனித யாத்திரையான ஹஜ் 2026-க்கான விண்ணப்ப நடைமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

யாத்ரீகர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ ஹஜ் இணையப்பக்கம் https://hajcommittee.gov.in மூலமாகவோ அல்லது  ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் பயனர்கள் “ஹஜ் சுவிதா” மொபைல் செயலி மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை 2025 ஜூலை 7, முதல் ஜூலை 31, (இரவு 11:59) வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களைச் சமர்ப்பிக்கும் முன் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியில் அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட இந்திய சர்வதேச பாஸ்போர்ட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும் இது குறைந்தபட்சம் 2026 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகக் கூடியதாக இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன் தங்களுடைய பயணம் குறித்த  தயார்நிலையை கவனமாக பரிசீலிக்குமாறு ஹஜ் குழு அறிவுறுத்துகிறது. எதிர்பாராத மரணம் அல்லது கடுமையான மருத்துவ அவசரநிலை தவிர, பயணத்தை ரத்து செய்வது அபராதங்களுக்கு வழிவகுத்து நிதி இழப்பை ஏற்படுத்தும்.

 

இந்த அறிவிப்பு ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்களுக்கு இந்திய அரசின் ஆதரவு மற்றும் வசதிகளுடன் ஆன்மிக பயணமான ஹஜ் பயண விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மற்றொரு வாய்ப்பாகும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு https://hajcommittee.gov.in. என்ற இணையப்பக்கத்தை காணவும்.

***

(Release ID: 2143072)

AD/TS/IR/SG/KR


(Release ID: 2143097)