பிரதமர் அலுவலகம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
07 JUL 2025 5:19AM by PIB Chennai
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.
பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக் கூட்டாண்மை, நிதி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். மின்னணு துறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை ஒப்புக்கொண்ட அதிபர் டயஸ்-கேனல், இந்தியாவின் மின்னணு பொது உள்கட்டமைப்பு மற்றும் யு.பி.ஐ. ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆயுர்வேதத்தை கியூபா அங்கீகரித்ததற்கும், ஆயுர்வேதத்தை கியூபாவின் பொது சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதற்காக நீட்டிக்கப்பட்ட ஆதரவிற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்திய பொதுப் பெயரியலான மருந்துகளை அணுகுவதற்காக இந்திய மருந்தியலை கியூபா அங்கீகரிப்பதை பிரதமர் முன்மொழிந்தார்.
சுகாதாரம், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய வளரும் நாடுகளின் கவலைக்குரிய பிரச்சினைகளில் பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
***
(Release ID 2142785)
AD/TS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2142899)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam