பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமருக்கு ராமர் கோயிலின் மாதிரி வடிவம் மற்றும் புனித நீரை வழங்கினார்
प्रविष्टि तिथि:
04 JUL 2025 8:57AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத் - பிஸ்ஸேசருக்கு, அவர் அளித்த இரவு விருந்தின் போது, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் சிறிய அளவிலான மாதிரியை வழங்கினார். மேலும் அவருக்கு, சரயு நதி மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரையும் வழங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் சிறு அளவிலான மாதிரியையும், சரயு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரையும் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரையும் அவருக்கு வழங்கினேன். அவை இந்தியா - டிரினிடாட் & டொபாகோ நாடுகளிடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பிணைப்புகளை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளன."
-----
(Release ID: 2141996)
AD/TS/SV/KPG/SG
(रिलीज़ आईडी: 2142101)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam