பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிரினிடாட் & டொபாகோவில் இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள் விநாடி-வினா போட்டி வெற்றியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 04 JUL 2025 9:03AM by PIB Chennai

டிரினிடாட் & டொபாகோவில் நடந்த (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற சங்கர் ராம்ஜட்டன், நிக்கோலஸ் மராஜ் மற்றும் வின்ஸ் மஹாடோ ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்த விநாடி-வினா உலகம் முழுவதும் பரவலான பங்கேற்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியாவுடனான நமது புலம்பெயர்ந்தோரின் தொடர்பை வலுப்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"டிரினிடாட் & டொபாகோவில் நடந்த (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) விநாடி- வினாவின் வெற்றியாளர்கள் சங்கர் ராம்ஜட்டன், நிக்கோலஸ் மராஜ் மற்றும் வின்ஸ் மஹாடோ ஆகியோரை சந்தித்தேன்.

இந்த விநாடி-வினா உலகம் முழுவதும் பரவலான பங்கேற்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியாவுடனான நமது புலம்பெயர்ந்தோரின் தொடர்பை வலுப்படுத்தியுள்ளது."

***

(Release ID: 2141998)
AD/TS/GK/AG/SG


(Release ID: 2142095) Visitor Counter : 3