பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 02 JUL 2025 2:34PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த அரசானது தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த அரசு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ( @Annapurna4BJP ) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஊட்டச்சத்து தொடர்பான போஷன் டிராக்கர், பிரத்யேக குறைதீர்ப்பு தொகுப்பு மற்றும் நேரடி பலன் பரிமாற்றத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் நாடு முழுவதும் நிகழ் நேர, பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.”

-----

(Release ID: 2141492)

AD/TS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2141582) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam