பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தீவிர வெப்ப அபாய மேலாண்மை முன்னெச்சரிக்கை தொலைநோக்கு அணுகுமுறையை இந்தியா எடுத்துள்ளது: டாக்டர் பி.கே. மிஸ்ரா
வெப்ப அலைகளால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடும்: டாக்டர் பி.கே. மிஸ்ரா
प्रविष्टि तिथि:
07 JUN 2025 10:03AM by PIB Chennai
தீவிர வெப்பத்தை உலகளாவிய நெருக்கடியாகக் கையாள வேண்டியதன் அவசரத் தேவையை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நேற்று (ஜூன் 06, 2025) நடைபெற்ற தீவிர வெப்ப அபாய மேலாண்மை குறித்த சிறப்பு அமர்வின் போது முக்கிய உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் வெப்பநிலை பொது சுகாதாரம், பொருளாதார நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மீள்தன்மை ஆகியவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். வெப்ப அபாய மேலாண்மைக்கான பொதுவான கட்டமைப்பை முன்னேற்றுவதற்கான முயற்சியை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தீவிர வெப்ப அபாய மேலாண்மைக்கு இந்தியா ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுத்துள்ளது என்று டாக்டர் மிஸ்ரா கூறினார். ஒருங்கிணைந்த தயார்நிலை, தணிப்பு உத்திகளை நோக்கி இந்தியா பேரிடர் மேலாண்மை அமைப்பு நகர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெப்ப அலை மேலாண்மை குறித்த விரிவான தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். ஆரம்ப எச்சரிக்கைகள், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, சமூக தொடர்பு ஆகியவை எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றும் என்பதை நிரூபிக்கும் முன்னோடி வெப்ப செயல் திட்டத்தை அவர் எடுத்துரைத்தார்.
வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய 23 மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட பகுதிகள் செயல்பாட்டு வெப்ப செயல் திட்டங்களைக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். வலுப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, மருத்துவமனை தயார்நிலை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவை வெப்ப அலை தொடர்பான இறப்புகளைக் கணிசமாகக் குறைத்துள்ளன என்பதை திரு பி.கே. மிஸ்ரா சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் அணுகுமுறை முழு அரசையும் முழு சமூகத்தையும் உள்ளடக்கியது என அவர் தெரிவித்தார். வெப்ப அலைகள் நகர்ப்புற மக்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இதைத் தடுக்க ஆராய்ச்சியையும் நடைமுறை தீர்வுகளையும் வழங்குவதற்கான பொதுவான கட்டமைப்பிற்கும் அவர் அழைப்பு விடுத்தார். உலகளாவிய கூட்டாளர்களுடன் நிபுணத்துவம், தொழில்நுட்ப திறன்களைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவின் முழு உறுதிப்பாட்டை டாக்டர் மிஸ்ரா எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2134746)
AD/TS/PLM/DL
(रिलीज़ आईडी: 2134790)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam