பிரதமர் அலுவலகம்
இந்திய இளைஞர்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். நாட்டின் இளையோர் சக்தி சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதி கொண்டதாகும்: பிரதமர்
புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை அடைவதில் இளையோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்: பிரதமர்
நமது இளையோர் சக்தி பிரகாசிக்கும் வகையில் அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் மத்திய அரசு வழங்கும். இளைஞர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பவர்கள்: பிரதமர்
Posted On:
06 JUN 2025 10:42AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்திய இளைஞர்கள் படைத்துள்ள சர்வதேச சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உலக அளவில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவை சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதியின் சின்னங்களாக உள்ளன என்று விவரித்த பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது நாட்டின் இளையோர் சக்தியின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் நம்பிக்கையால் தூண்டப்பட்டுள்ளது என்று கூறினார்.
புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு அசாதாரணமானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். "கடந்த 11 ஆண்டுகளில், இளைஞர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் புத்தொழில் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற அரசின் முயற்சிகள் காரணமாக இளைஞர்களின் திறன் மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில், இளையோர் சக்தியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சாத்தியக்கூறு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்திய இளைஞர்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியானது சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதி கொண்டதாகும். நாட்டில் உள்ள இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு நிகரற்ற ஆற்றலுடனும் திடமான நம்பிக்கையுடனும் பங்காற்றி வருகின்றனர்.
புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு அசாதாரணமானது. கடந்த 11 ஆண்டுகளில், இளைஞர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. புத்தொழில் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற அரசின் சீரிய முயற்சிகள் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதுடன் அவர்களது உறுதியான நம்பிக்கையில் வேரூன்றியுள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள்".
***
(Release ID: 2134443)
AD/TS/VS/AG/KR
(Release ID: 2134484)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam