பிரதமர் அலுவலகம்
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் சிந்தூர் மரக்கன்று நட்டார்
प्रविष्टि तिथि:
05 JUN 2025 11:48AM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டார் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது அசாதாரண துணிச்சலையும் தேசபக்தியையும் வெளிப்படுத்திய குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த துணிச்சலான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் இந்த மரக்கன்று அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் அண்மையில் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், சிந்தூர் செடிப் பரிசு நாட்டின் பெண் சக்தியின் துணிச்சல் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாகத் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் துணிச்சல் மற்றும் வீரத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக கட்ச் பகுதியில் இருந்த துணிச்சல் மிக்க தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், அண்மையில் குஜராத்தில் பயணம் மேற்கொண்ட போது தனக்கு சிந்தூர் செடி ஒன்றைப் பரிசளித்தனர். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தச் செடியை நடும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளது. இந்தச் செடி நாட்டின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலிமையான அடையாளமாகத் திகழும்".
-----
(Release ID: 2134049)
AD/TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2134099)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam