பிரதமர் அலுவலகம்
ஜெனீவாவில் நடைபெற்ற 8-வது உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு கூட்டம்: உலகளாவிய பேரிடர் மீட்சித்திறன் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா மீண்டும் உறுதிப்படுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUN 2025 9:06AM by PIB Chennai
ஜெனீவாவில் நேற்று (03 ஜூன் 2025) நடைபெற்ற 8-வது உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு கூட்டத்தில், இந்தியா சார்பில்பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா பங்கேற்று, உலகளாவிய பேரிடர் மீட்சித்திறன் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். நார்வேயின் சர்வதேச உறவுகள் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் திருமதி ஸ்டைன் ரெனேட் ஹாஹெய்முடன் அவர் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களையும் நடத்தினார். பேரிடர் அபாயக் குறைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பேரிடர் தயார்நிலை, மீட்சித்திறன் கட்டமைப்பில் இந்தியாவின் முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுத்துரைத்து, பாதுகாப்பான, மீட்சித்திறன் மிக்க எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் மிஸ்ரா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
***
(Release ID: 2133686)
AD/SM/SMB/PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2133722)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam