நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உலக நாடுகளுக்கு வலுவாக எடுத்துரைக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள்
Posted On:
17 MAY 2025 9:19AM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் தொடர் போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்கள் ஐ நா பாதுகாப்புக்கு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் உட்பட முக்கியமான நட்பு நாடுகளுக்கு இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கியக் குழுக்கள் தீவிரவாத செயல்களின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கான இந்தியாவின் தேசிய அளவிலான ஒருமித்த கருத்தையும், உறுதியான அணுகுமுறையையும் உலக நாடுகளின் முன் எடுத்துரைப்பார்கள். மேலும் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை இந்தப் பிரதிநிதிகள் குழுக்கள் உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பார்கள்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் புகழ்பெற்ற தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார்கள்.
பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்துவார்கள்:
1) திரு. சசி தரூர், இந்திய காங்கிரஸ் கட்சி
2) திரு ரவிசங்கர் பிரசாத், பாஜக
3) திரு சஞ்சய் குமார் ஜா, ஜே.டி.யு
4) திரு பைஜயந்த் பாண்டா, பாஜக
5) திருமதி. கனிமொழி கருணாநிதி, தி.மு.க
6) திருமதி. சுப்ரியா சுலே, என்சிபி
7) திரு ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129254
***
TS/SV/DL
(Release ID: 2129283)
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Nepali
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Gujarati
,
Kannada
,
Malayalam