பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் 2025-க்கான பரிந்துரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
03 MAY 2025 10:44AM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் அசாதாரணமான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய அளவிலான விருதான பிரதம மந்திரி தேசிய பாலர் 2025 விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2025 ஆகும். அனைத்துப் பரிந்துரைகளும் https://awards.gov.in என்ற அதிகாரப்பூர்வ தேசிய விருதுத் தளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு (ஜூலை 31, 2025 நிலவரப்படி) பரிந்துரைகள் செய்யலாம். எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ சிறப்பான சாதனைகள் படைத்த குழந்தைகளைப் பரிந்துரைக்கலாம். சுய நியமனம் மூலம் குழந்தைகள் தங்களுக்காக தாங்களே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் முதல் பெயர், கடைசி பெயர், பிறந்த தேதி, விண்ணப்பதாரர் வகை (தனிநபர்/அமைப்பு), மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, ஆதார் எண் போன்ற விவரங்களையும் வழங்கி தளத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது உள்நுழைய வேண்டும். பதிவு செய்தவுடன், அவர்கள் "பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் 2025" என்பதைத் தேர்ந்தெடுத்து, "நியமிக்கவும்/இப்போதே விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய விருது வகையைத் தேர்ந்தெடுத்து, நியமனம் தங்களுக்கானதா அல்லது வேறு ஒருவருக்கானதா என்பதைக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் சாதனை குழந்தைகளின் விவரங்கள், சாதனை மற்றும் அதன் தாக்கத்தை விவரிக்கும் சுருக்கமான விவரிப்பு (அதிகபட்சம் 500 வார்த்தைகள்), துணை ஆவணங்கள் (பி.டி.எஃப். வடிவம், 10 இணைப்புகள் வரை) மற்றும் சமீபத்திய புகைப்படம் (ஜேபிஜி/ஜேபெக்/பி.என்.ஜி. வடிவத்தில்) ஆகியவை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை வரைவுகளாகச் சேமித்து இறுதிச் சமர்ப்பிப்புக்கு முன் திருத்தலாம். மதிப்பாய்வு செய்து சமர்ப்பித்தவுடன், விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்யக்கூடிய நகல் கிடைக்கும்.
இந்த விருது மூலம், 18 வயதுக்குட்பட்ட சாதனை இளைஞர்கள் (ஜூலை 31, 2025 நிலவரப்படி) கௌரவிக்கப்படுவார்கள். பின்வரும் ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் குழந்தைகள் கௌரவிக்கப்படுவார்கள்: துணிச்சல், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம்.
இந்த விருதுகளின் நோக்கங்கள், பல்வேறு துறைகளில் இந்திய சிறார்களின் சாதனைகளைக் கொண்டாடுவது,நிஜ வாழ்க்கை முன்மாதிரிகளை எடுத்துக் காண்பிப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சகாக்களை ஊக்குவிப்பது, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்ப்பது ஆகும்.
மேலும் தகவலுக்கும் பரிந்துரை செய்வதற்கும், https://awards.gov.in ஐப் பார்வையிடவும்.
****
(Release ID: 2126399)
TS/PKV/RJ
(Release ID: 2126436)
Visitor Counter : 21
Read this release in:
Bengali
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam