தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
“டிஜிட்டல் வானொலி எதிர்கால ஊடகம்; மரபார்ந்த ஊடகமும் இணைந்திருக்க வேண்டும்” - வேவ்ஸ் 2025-ல் நடந்த கலந்துரையாடலில் வெளியான கருத்து
Posted On:
02 MAY 2025 3:09PM
|
Location:
PIB Chennai
'டிஜிட்டல் யுகத்தில் வளம் பெறுதல்' என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற வேவ்ஸ் 2025 நிகழ்வில் உலகளாவிய நிபுணர்களை ஒன்றிணைத்து ஒரு நுண்ணறிவுமிக்க உரையாடல் இடம்பெற்றது .
மதிப்புமிக்க குழு உறுப்பினர்களில் வணிக வானொலியின் முன்னோடி ஜாக்குலின் பியர்ஹோர்ஸ்ட், டிஜிட்டல் ரேடியோ மொண்டியேல் தலைவர் ருக்சாண்ட்ரா ஒப்ரேஜா, துணைத்தலைவர் அலெக்சாண்டர் ஜிங்க், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் வெம்பட்டி, பிரபல ஒலிபரப்பு தொழில்நுட்ப நிபுணர் டெட் லாவெர்டி ஆகியோர் அடங்குவர். ரெட் எஃப்எம் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஷா நாராயணன், நிபுணத்துவத்துடன் உரையாடல்களை நிர்வகித்து, வானொலி ஒலிபரப்புத் துறையை பாதிக்கும் காரணிகளை எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் வானொலி எதிர்காலத்தில் முதன்மை வடிவமாக இருக்கும் என்று ஜாக்குலின் பியர்ஹோர்ஸ்ட் கருதுகிறார். ஏனெனில் இது சிறந்த தரமான ஒலி , அதிக நம்பகமான பரிமாற்றம், மல்டிமீடியா கூறுகளை ஒருங்கிணைக்கும் திறன் போன்ற நன்மைகளை வழங்குகிறது. "சில சூழல்களில், குறிப்பாக எளிமையான தகவல்தொடர்பு மற்றும் வரையறுக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ள பகுதிகளில் மரபார்ந்த வானொலி பொருத்தமானதாக இருந்தாலும், டிஜிட்டல் ஒலிபரப்புக்கான மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கருத்து தெரிவித்தார். மரபிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதன் மூலம் செலவு சேமிப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.
நல்ல, பயனுள்ள உள்ளடக்கத்தின் மதிப்பு பற்றிப் பேசுகையில், பிரிட்டிஷ் டிஜிட்டல் வானொலி நிலையமான அப்சல்யூட் ரேடியோவின் வெற்றிக் கதையை ஜாக்குலின் பியர்ஹோர்ஸ்ட் எடுத்துரைத்தார், இது 70கள், 80கள் மற்றும் 90களில் வளர்ந்து வருவாய் ஈட்டியது. அதே நேரத்தில் அதன் பார்வையாளர்களுக்கு பயனளிக்கும் பல்வேறு கல்வி மற்றும் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
சில ஐரோப்பிய நாடுகள் FM நிலையங்களை முழுமையாக நிறுத்தி, முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை முயற்சித்தாலும், அது சரியான செயல் அல்ல என்று ருக்சாண்ட்ரா ஒப்ரேஜா கூறினார். கொள்கை தலையீடுகளுக்காக அரசுடன் பேசும்போது வணிக வானொலி நிலையங்களின் தேவைகளைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று அவர் பரிந்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126121
****
SM/SMB/KPG/SG
Release ID:
(Release ID: 2126288)
| Visitor Counter:
37