WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் படைப்பாளி பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் நுகர்வோர் செலவினத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செல்வாக்கு செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது: பாஸ்டன் ஆலோசனைக் குழு அறிக்கை வேவ்ஸ் 2025-ல் வெளியிடப்படும்

 Posted On: 02 MAY 2025 2:33PM |   Location: PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் தளம் அதன் படைப்பாளி பொருளாதார எழுச்சியால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. "உள்ளடக்கத்திலிருந்து வணிகத்திற்கு: இந்தியாவின் படைப்பாளி பொருளாதாரத்தை வரைபடமாக்குதல்" என்ற தலைப்பில் பாஸ்டன் ஆலோசனைக் குழு (பிசிஜி ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் 2025-ல் நாளை (மே 3, 2025) வெளியிடப்பட உள்ளது. இந்தியாவின் படைப்பாளிகள் தற்போது ஆண்டுதோறும் நுகர்வோர் செலவினத்தில் 350 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான செல்வாக்கை செலுத்துகின்றனர் என்பதை இது வெளிப்படுத்தும் .இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2 முதல் 2.5 மில்லியன் டிஜிட்டல் படைப்பாளிகள் செயல்பாட்டில் உள்ளனர்.  இவர்கள் 1,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட தனிநபர்கள் என வரையறுக்கப்படுகின்றனர் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், அவர்களில் 8–10% பேர் மட்டுமே தற்போது தங்கள் உள்ளடக்கத்தை திறம்பட பணமாக்குகிறார்கள், இது வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறையின் பயன்படுத்தப்படாத திறனை சுட்டிக்காட்டுகிறது. தற்போது 20–25 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்ட படைப்பாளிகளின் நேரடி வருவாய், தசாப்தத்தின் இறுதியில் 100–125 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் 2025-ல் பாஸ்டன் ஆலோசனைக் குழு அறிக்கை நாளை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறை, திரைப்படங்கள் ஆகியவற்றின் வளர்ந்து வரும் வரையறைகள் குறித்து  வேவ்ஸ் 2025 மெகா நிகழ்வில் நடைபெறும் விவாதங்கள், டிஜிட்டல் மீடியா துறையில் இந்தியாவின் விரிவடைந்து வரும் தடத்தை பிரதிபலிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126106 

********  

SM/SMB/KPG/SG

 


Release ID: (Release ID: 2126186)   |   Visitor Counter: 18