தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
“சட்ட நடைமுறைகள்: இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2025 குறித்த ஒழுங்குமுறை கையேடு"- நாளை வெளியிடப்படவுள்ளது”
प्रविष्टि तिथि:
02 MAY 2025 2:39PM
|
Location:
PIB Chennai
வேவ்ஸ் 2025 என்பது இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு தளத்தில் ஒரு திருப்புமுனை தருணமாகும். இந்த நிகழ்வில் "சட்ட நடைமுறைகள்: இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறை 2025 குறித்த ஒழுங்குமுறை கையேடு" என்ற தலைப்பில் ஒரு முக்கிய அறிக்கை நாளை வெளியிடப்படும். வேவ்ஸ் 2025-ன் அறிவுப் பங்குதாரர்களில் ஒருவரான கைதான் & கோ தயாரித்த இந்த அறிக்கை, இந்தியாவின் துடிப்பு மிக்க ஊடக மற்றும் பொழுதுபோக்கு சூழல் அமைப்பின் வளர்ந்து வரும் திறனை தொடர்ந்து வடிவமைக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை விவரிக்கிறது .
இந்தக் கையேடு, வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தை நுழைவு, ஒத்துழைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கான சட்ட வரைபடத்தை ஊக்குவித்து நெறிப்படுத்திய அரசின் முக்கிய முயற்சிகள் மற்றும் சட்டத் தலையீடுகளை உள்ளடக்கியது. உற்பத்தி மற்றும் கூட்டு உற்பத்தி ஊக்கத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இது உள்ளடக்க உருவாக்கத்திற்கு முதன்மையான இடமாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.
விளம்பரம், ஆன்லைன் கேமிங், டிஜிட்டல் ஊடகம் போன்ற முக்கிய துறைகளில், தொழில்துறை அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையே ஒரு கூட்டாண்மையை உருவாகியுள்ளது. இது சட்ட இணக்கத்தை உறுதி செய்யும் அதே வேளையில் பங்குதாரர்களுக்கு செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இந்தக் கையேடு துடிப்பு மிக்க, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பங்குதாரர்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126108
----
SM/SMB/KPG/SG
रिलीज़ आईडी:
2126166
| Visitor Counter:
31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Nepali
,
Gujarati
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu