பிரதமர் அலுவலகம்
டிரினிடாட் மற்றும் டொபாகோ தேர்தலில் வெற்றி பெற்ற திருமிகு கம்லா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
29 APR 2025 2:49PM by PIB Chennai
டிரினிடாட் மற்றும் டொபாகோ தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி திருமிகு கம்லா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் டிரினிடாட் டொபாகோவுக்கும் இடையேயான வரலாற்று ரீதியான நெருக்கமான மற்றும் குடும்ப ரீதியிலான உறவுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
தேர்தலில் வெற்றி பெற்ற திருமிகு கம்லா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு@MPKamla மனமார்ந்த வாழ்த்துக்கள். டிரினிடாட் டொபாகோவுடனான எங்களது வரலாற்று ரீதியான நெருக்கமான மற்றும் குடும்ப ரீதியிலான உறவுகளை நாங்கள் மதிக்கிறோம். நமது மக்களின் பகிரப்பட்ட வளம் மற்றும் நல்வாழ்வுக்கான நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்."
----
(Release ID: 2125122)
TS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2125174)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam