தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் திரைப்படப் போஸ்டர் தயாரிப்பு போட்டியில் சிறந்த 50 டிஜிட்டல் போஸ்டர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
Posted On:
19 APR 2025 1:00PM
|
Location:
PIB Chennai
உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களின் அமோக வரவேற்பைத் தொடர்ந்து அதன் திரைப்பட போஸ்டர் தயாரிப்பு போட்டியின் முதல் 50 டிஜிட்டல் போஸ்டர் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் காட்சி கதைசொல்லிகளின் ஆர்வத்தையும் புதிய கண்டுபிடிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் போட்டிக்கு 542 டிஜிட்டல் போஸ்டர்கள் வரப்பெற்றன. கையால் வரையப்பட்ட சுவரொட்டி தயாரிப்பு போட்டியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலை நிறுவனங்களில் இருந்து 10 போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் வேவ்ஸ் உச்சிமாநாட்டின் போது நடக்கும் நேரடிப் போட்டியில் இறுதி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
டிஜிட்டல் போஸ்டர் தயாரிக்கும் போட்டி
மியூசியோ கேமரா குருகிராமின் புகைப்படக் கலைஞரும் நிறுவனர் இயக்குநருமான ஆதித்யா ஆர்யா, தெற்கு தில்லி மகளிர் பாலிடெக்னிக் கலைஞர் பிரிண்ட்மேக்கர் மற்றும் துணை முதல்வர் ஆனந்த மோய் பானர்ஜி ஆகியோரும் இமேஜினேஷன் ஸ்ட்ரீட் ஆர்ட், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம் ஆகியவையும் இணைந்து கடுமையான போட்டியை நடத்தினர். 197 போஸ்டர்களின் ஆரம்பப் பட்டியலில் இருந்து, படைப்பாற்றல், அசல் தன்மை, கதைசொல்லல் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான 50 போஸ்டர்களை நடுவர் குழு தேர்ந்தெடுத்தது.
முதல் 50 பேரில், மூன்று சிறந்த இறுதிப் போட்டியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
சப்தோசிந்து சென்குப்தா
ஷிவாங்கி சர்மா காஷ்யப்
சுரேஷ் டி நாயர்
2025, மே 1 முதல் 4, வரை மும்பையில் நடைபெறவிருக்கும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் முதல் மூன்று இடங்களுக்கான இறுதி தரவரிசை அறிவிக்கப்படும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 50 போஸ்டர்களும் டிஜிட்டல் முறையில் உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு பங்கேற்பாளர்களுக்குத் தெரிவுநிலை மற்றும் அங்கீகாரத்திற்கான மதிப்புமிக்க தளத்தை வழங்கும்.
வேவ்ஸ்-ல் கையால் வரையப்பட்ட போஸ்டர் கலை நேரடி போட்டியுடன் கொண்டாடப்படும்
ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் காட்சி அடையாளத்தை வரையறுத்த ஒரு பாரம்பரிய கலை வடிவத்தின் மீது ஒளி பாய்ச்சும் வகையில் கையால் வரையப்பட்ட திரைப்பட சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை வேவ்ஸ் நடத்தவுள்ளது. எம்.எஃப் ஹுசைன், எஸ்.எம்.பண்டிட் போன்ற பழம்பெரும் கலைஞர்களின் உணர்வைத் தூண்டும் இந்தப் பிரிவு, கையால் வரையப்பட்ட சுவரொட்டிகளின் வளமான பாரம்பரியத்தை மதிக்கிறது.
அனைத்து உள்ளீடுகளிலுமிருந்து, 10 மாணவர் கலைஞர்கள் வேவ்ஸ்-ல் நேரடி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிகழ்நேரத்தில் கையால் வரையப்பட்ட திரைப்பட சுவரொட்டிகளை உருவாக்கும் போது அவர்களின் திறமைகளை இந்த நிகழ்வு வெளிப்படுத்தும். இந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஊடகத்தில் சிறந்த பங்களிப்பிற்காக முதல் மூன்று வெற்றியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்படுவார்கள்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கும் வெற்றியாளர்களின் முழுமையான பட்டியலுக்கும் இந்த இணைய தளத்தைக் காண்க: https://www.nfdcindia.com/waves-poster-challenge-2025/
முதலாவது உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) துறைக்கான மைல்கல் நிகழ்வாகும். இது மத்திய அரசால் மகாராஷ்டிராவின் மும்பையில் 2025, மே 1 முதல் 4 வரை நடத்தப்படும்.
நீங்கள் தொழில் நிபுணராகவோ, முதலீட்டாளராகவோ, படைப்பாளராகவோ, புதிய கண்டுபிடிப்பாளராகவோ இருந்தால், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைக்க, ஒத்துழைக்க, புதுமைப்படுத்த மற்றும் பங்களிப்பதற்கான உலகளாவிய தளத்தை உச்சிமாநாடு வழங்குகிறது.
****
(Release ID: 2122844)
SMB/SG
Release ID:
(Release ID: 2125072)
| Visitor Counter:
6
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam