தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் 2025: ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கண்காட்சி
Posted On:
28 APR 2025 5:21PM
|
Location:
PIB Chennai
உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025 – உலகின் முன்னணி ஊடக, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் மே 1 முதல் 4 வரை ஒன்றிணைக்கும். 15,000 சதுர மீட்டர் பரப்பளவில், வேவ்ஸ் 2025 தொழில்துறையில் தலைசிறந்தவர்கள்,படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முன்னோடிகளுக்கு உலகளாவிய பொழுதுபோக்கின் எதிர்காலத்தை ஒன்றிணைக்கவும், ஒத்துழைக்கவும் ஆராயவும் இறுதித் தளமாக செயல்படும். நெட்ஃபிளிக்ஸ், அமேசான், கூகுள், மெட்டா, சோனி, ரிலையன்ஸ், அடோப், டாட்டா, பாலாஜி டெலி ஃபிலிம்ஸ், தர்மா புரொடக்சன்ஸ், சரிகம மற்றும் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் உட்பட 100 க்கும் மேற்பட்ட முன்னணி கண்காட்சியாளர்களுடன், அடுத்த தலைமுறை புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களான ஜெட்சிந்தசிஸ், டிஜிட்டல் ரேடியோ மோன்டையல் (DRM), ஃப்ரீ ஸ்ட்ரீம் டெக்னாலஜிஸ், நியூரல் காரேஜ் மற்றும் ஃபிராக்டல் பிக்சர் ஆகியோருடன் வேவ்ஸ் மாநாடு பொழுதுபோக்கு துறையில் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கான உறுதியான சந்திப்புப் புள்ளியாக இருக்கும்.
இந்த அசாதாரணமான உச்சிமாநாட்டின் மையமாக 1,470 சதுர மீட்டர் பரப்பளவில் பாரத் பெவிலியன் உள்ளது. " காலா டு கோட்" என்ற கருப்பொருளின் கீழ் இந்தியாவின் ஆற்றல்மிக்க பாரம்பரியத்தை இது கொண்டாடுகிறது. பார்வையாளர்கள் இந்திய கதைசொல்லலின் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஒரு அதிவேக பயணத்தை மேற்கொள்வார்கள் - பண்டைய வாய்வழி மரபுகள் மற்றும் காட்சிக் கலைகள் முதல் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரை காட்சிப்படுத்தப்படும்.
பாரத் பெவிலியனைத் தவிர, வேவ்ஸ் 2025-ல் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, குஜராத், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் தங்கள் கலாச்சார மற்றும் படைப்பு ஆற்றல்களை பெருமையுடன் வெளிப்படுத்தும் பிரத்யேக மாநில அரங்குகளைக் கொண்டிருக்கும்.
மேலும், எம்எஸ்எம்இ பெவிலியன் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் வணிகங்கள் மற்றும் புதுமையாளர்களுக்கு தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் இணைவதற்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்கும்.
2025 மே 1 முதல் 4 வரை வணிகத்துக்காக கண்காட்சியும் திறந்திருக்கும், 2025 மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பொதுமக்கள் பார்வைக்காகதா திறந்திருக்கும். கண்காட்சி மே 1 முதல் 3 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், மே 4, 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். அதன் அசாதாரண அளவு, செல்வாக்குமிக்க கண்காட்சியாளர்கள் மற்றும் முன்னோக்கிய பார்வை ஆகியவற்றுடன், வேவ்ஸ் 2025 உலகளாவிய ஊடக ஒருங்கிணைப்புக்கான முதன்மையான மையமாக உருவாக உள்ளது.
***
(Release ID: 2124892)
TS/PKV/AG/DL
Release ID:
(Release ID: 2124949)
| Visitor Counter:
9