WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் அனிமேஷன் திரைப்பட இயக்குநர்களுக்கான சவால் போட்டி: 42 அற்புதமான அனிமேஷன் படங்கள் இறுதிச் சுற்றில் உள்ளன

 Posted On: 28 APR 2025 2:41PM |   Location: PIB Chennai

உலக  ஒலி ஒளி  மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025 இன் ' இந்தியாவில் கலைப் படைப்புகளை உருவாக்குங்கள்'(கிரியேட் இன் இந்தியா) சவால் சீசன் -1' -ன் ஒரு பகுதியாக நடைபெற்ற அனிமேஷன் இயக்குநர்களுக்கான போட்டியில், 42 இறுதிப் போட்டியாளர்கள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டனர். தேசிய அளவிலான இந்த சவால் போட்டியை டேன்சிங் ஆட்டம்ஸ் ஸ்டுடியோ  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தி வருகிறது. 2025 மே 1-4 வரை மும்பையில் நடைபெறவுள்ள வேவ்ஸ் உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட வேண்டிய சிறந்த 42 படங்கள் குறித்த விரிவான படைப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான முயற்சி திறமையான படைப்பாளர்களை ஒரே எண்ணம் கொண்ட நபர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, புவியியல் எல்லைகளைக் கடந்து படைப்பாளர்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் இது வளர்க்கிறது.

போட்டியின் கடுமையான ஒன்பது மாத மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறந்த 42 படங்கள், பாரம்பரிய அனிமேஷன், விஎஃப்எக்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) / விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) மற்றும் மெய்நிகர் தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அனிமேஷனின் முழு வீச்சையும் வெளிப்படுத்தி அசல் கதைசொல்லலில் கவனம் செலுத்தியுள்ளன. 12 திரைப்படங்கள், 18 குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் 9 மற்றும் 3 ஏஆர் / விஆர் அனுபவங்கள் உள்ளிட்ட இந்த 42 படைப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 42 திரைப்படங்களும் இந்த தனித்துவமான முயற்சியின் மூலம் தொழில்துறை பங்குதாரர்களுக்கு திரையிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124840

***

TS/PKV/AG/KR

 


Release ID: (Release ID: 2124870)   |   Visitor Counter: 17