WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் பஜார் 9 மொழிகளில் 15 திரைப்படங்கள் கொண்ட 'சிறந்த தேர்வுகள்' வரிசையை வெளியிடுகிறது

 प्रविष्टि तिथि: 25 APR 2025 4:10PM |   Location: PIB Chennai

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இந்தியா ஒரு மேலாதிக்க நிலையை அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற திறமைசாலிகள்,  வளமான கலாச்சார பாரம்பரியத்தின் மூலம்  உள்ளடக்கங்களை உருவாக்கி வருகின்றனர். மும்பையில் மே 1 முதல் 4 வரை நடைபெறவுள்ள உலக ஒலி,ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்), ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஒரு மைல் கல்லாக மாற தயாராகி வருகிறது. உள்ளடக்க உருவாக்கம், முதலீட்டு இலக்கு மற்றும் 'இந்தியாவில் உருவாக்குங்கள்' வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய பரவலுக்கான ஒரே இடமாக இந்தியாவை இந்த உச்சிமாநாடு ஊக்குவிக்கும்.

 

வேவ்ஸ் பஜார் என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான முதன்மையான உலகளாவிய சந்தையாகும். இது இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உருமாற்றம் ஏற்படுத்தக்கூடிய தளமாகும். இது திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு, வாங்குபவர்கள், விற்பனையாளர்கள் தங்களின்  திட்டங்கள் மற்றும் சுயவிவரங்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.  அதே நேரத்தில் அவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தொழில்முறைக் கட்டமைப்பையும் விரிவுபடுத்துகிறது.

 

 வேவ்ஸ் பஜாரில் அமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக திரையிடல்   அரங்கமாக  பார்வைக் கூடம் இருக்கும். இது மே 1 முதல் 4, 2025 வரை நடைபெறுகிறது. உலகெங்கிலும் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் திட்டங்களைக் காண்பிப்பதற்கான இடமாக இது செயல்படுகிறது. இந்தப் படங்கள் திரைப்பட விழாக்கள், உலகளாவிய விற்பனை, விநியோக கூட்டாண்மை மற்றும் இறுதி நிதி ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை தீவிரமாகத் தேடுகின்றன.

 

திரைப்பட நிரலாளர்கள், விநியோகஸ்தர்கள், உலக விற்பனை முகவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற தொழில்துறை வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தக் கூடத்தில் வேவ்ஸ் பஜாரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் இந்த திரைப்படங்களைப் பார்க்கலாம்.

 

முதன்முறையாக வேவ்ஸ் பஜாரில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பல்கேரியா, ஜெர்மனி, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 100 திரைப்படங்கள் பார்வை அறை நூலகத்தில் காணக் கிடைக்கும்.

 

வேவ்ஸ் பஜார் உயர் தேர்வு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 15 திட்டங்களில் 9 திரைப்படங்கள், 2 ஆவணப்படங்கள், 2 குறும்படங்கள் மற்றும் 2 வெப்-சீரிஸ் ஆகியவை அடங்கும். இவை தயாரிப்பாளர்கள், விற்பனை முகவர்கள், விநியோகஸ்தர்கள், விழா நிகழ்ச்சி நிரலாளர்கள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு மே 2 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் வேவ்ஸ் பஜாரில் காணக்கிடைக்கும்.

 

தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள்

1.    தி வேஜ் கலெக்டர் | தமிழ் | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - இன்ஃபன்ட் சூசை | தயாரிப்பு - பகவதி பெருமாள்

2.பதுல் | இந்தி | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - ராதேஷ்யாம் பிபல்வா | தயாரிப்பு - ஷரத் மிட்டல்

 

3.தூஸ்ர பையா (Levir) | ஹரியான்வி,ஹிந்தி | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - பகத் சிங் சைனி | தயாரிப்பு - பர்வீன் சைனி

 

4.பங்குடியான் (காற்றில் இதழ்கள்) | இந்தி | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - அப்துல் அஜீஸ் | தயாரிப்பு - அப்துல் அஜீஸ், ஜோத்சனா ராஜ்புரோஹித்

5.கிட்கி காவ் (குளிர்கால இரவில் இருந்தால்) | மலையாளம் | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - சஞ்சு சுரேந்திரன் | தயாரிப்பாளர் - டாக்டர் சுரேந்திரன் எம்.என்.

6.சுச்சனா - ஆரம்பம் | வங்காளம் | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - பௌசாலி சென்குப்தா | தயாரிப்பு - அவினந்த சென்குப்தா

7.ஸ்வாகா இன் தி நேம் ஆப் பயர் | மாகஹி | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - அபிலாஷ் ஷர்மா | தயாரிப்பாளர் - விகாஷ் சர்மா

8.கோதிபுவா- எல்லைகளுக்கு அப்பால் | ஆங்கிலம்,இந்தி,ஒடியா | இந்தியா | ஆவணப்படம்

இயக்குனர் & தயாரிப்பாளர் - சிந்தன் பரேக்

9.இந்தியாவில் இருந்து | ஆங்கிலம் | அமெரிக்கா | ஆவணக் குறும்படம்

இயக்குனர் & தயாரிப்பாளர் - மந்தர் ஆப்தே

10.மூன்றாவது மாடி | இந்தி | இந்தியா | குறும்படம்

இயக்குனர் - அமந்தீப் சிங் | தயாரிப்பு - அமன்தீப் சிங்

11.ஜஹான் | இந்தி | இந்தியா | புனைகதைக் குறும்படம்

இயக்குனர் & தயாரிப்பாளர் - ராகுல் ஷெட்டி

12.பிளானட் இந்தியா | ஆங்கிலம்,இந்தி | இந்தியா | தொலைக்காட்சி நிகழ்ச்சி

இயக்குனர் - காலின் பட்ஃபீல்ட் | தயாரிப்பாளர் - தம்சீல் ஹுசைன்

13.பாரதி அவுர் பிபோ | இந்தி | இந்தியா | அனிமேஷன் வெப்-சீரிஸ்/டிவி

இயக்குனர் - சினேகா ரவிஷங்கர் | தயாரிப்பாளர் - தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் &

பப்பெட்டிகா மீடியா பிரைவேட் லிமிடெட்

14.அச்சப்பாவின் ஆல்பம் (கிராமப்பாவின் ஆல்பம்) | மலையாளம் | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் - தீப்தி பிள்ளை சிவன் | தயாரிப்பாளர் - தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்

15.துனியா நா மனே (எதிர்பாராதது) | இந்தி | இந்தியா | கதைப் படம்

இயக்குனர் & தயாரிப்பாளர் - V. சாந்தாராம்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124294

***

TS/PKV/DL


रिलीज़ आईडी: 2124408   |   Visitor Counter: 39

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam