உள்துறை அமைச்சகம்
திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ்-ன் இறுதிச் சடங்கு தினமான ஏப்ரல் 26-ம் தேதி அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
24 APR 2025 4:50PM by PIB Chennai
திருச்சபையின் தலைமைத் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் 26.04.2025 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். அன்றைய தினம் நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்தன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
***
(Release ID: 2124080)
TS/SV/RR/KR
(रिलीज़ आईडी: 2124102)
आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Assamese
,
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam