தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மண்டல நிலையிலிருந்து தேசிய அளவிலான கவனத்தை ஈர்ப்பது வரை

 Posted On: 21 APR 2025 4:08PM |   Location: PIB Chennai

பல மாதங்களாக மண்டலங்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்குப் பிறகு நாடு முழுவதும் 11 நகரங்களில் இருந்து வேவ்ஸ் அனிமேஷன் மற்றும் மங்கா (வாம்) போட்டிகளுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மும்பையில் அடுத்த மாதம் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள வேவ்ஸ் ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

வாம் போட்டிகள் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, வேவ்ஸ் உலக ஒலி-ஔி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மத்திய அரசின் தகவல்,  ஒளிபரப்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், மெய்நிகர் யதார்த்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த மாநாடு படைப்பாற்றல் போட்டிகளுக்கான பெரிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் போட்டிகளில் 1,100 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். விரிவான தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு, 750 இறுதிப் போட்டியாளர்கள் 32 பிரத்யேக போட்டிகளுக்காகதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123166

----

TS/SV/KPG/KR/DL


Release ID: (Release ID: 2123252)   |   Visitor Counter: Visitor Counter : 8