பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 30 MAR 2025 6:05PM by PIB Chennai

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

சத்தீஸ்கர் மஹ்தாரி கி ஜெய்! (சத்தீஸ்கர் வாழ்க!)

ரத்தன்பூர் வாலி மாதா மகாமாயா கி ஜெய்!

கர்மா மாயா கி ஜெய்! பாபா குரு காசிதாஸ் கி ஜெய்!

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு ராமன் தேகா அவர்களே, மாநில முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ் சாய் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் அவர்களே, இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான திரு தோகான் சாஹு அவர்களே, சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தலைவர்  திரு ராமன் சிங் அவர்களே, துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா அவர்களே, திரு அருண் சாஹு அவர்களே, சத்தீஸ்கர் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற  உறுப்பினர்களே, தொலைதூரப் பகுதிகளிலிருந்து வந்து இங்கு கூடியிருக்கும் எனது சகோதர சகோதரிகளே!

இன்று புத்தாண்டின் தொடக்கம். இது நவராத்திரியின் முதல் நாளாகும். மேலும் இந்த மாநிலம் மாதா மகாமாயாவின் இடமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது நாட்கள், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படும். நவராத்திரியின் முதல் நாளான இன்று இங்கு வந்திருப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சில நாட்கள் முன்பாக பக்த சிரோமணி மாதா கர்மாவைக் கௌரவிக்கும் வகையில் ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது. இந்தத் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நவராத்திரி திருவிழா ராம நவமியின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் முடிவடையும். மேலும் சத்தீஸ்கரின் ராமர் மீதான பக்தி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. நமது ராமநவமி சமாஜம் ராமரின் தெய்வீக நாமத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. பகவான் ராமரின் தாய்வழி மண்ணைச் சேர்ந்த மக்களுக்கும், எனது நண்பர்களான உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!

நண்பர்களே,

இந்த நன்னாளில், சுயம்பு சிவலிங்க மகாதேவ் ஆசியுடன், சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ.33,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் ஏழை மக்களுக்கான வீட்டுவசதி, பள்ளிகள், சாலைகள், ரயில்வே, மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த முயற்சிகள் அம்மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும். இவை இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

நம் நாட்டின் பாரம்பரியத்தில், ஒவ்வொருவருக்கும் அடைக்கலம் கொடுப்பது ஒரு பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஒருவரின் கனவு நிறைவேறுவதைவிட கூடுதல் மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை. இந்த, நவராத்திரி மற்றும் புத்தாண்டின் புனிதமான சந்தர்ப்பத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளில் குடியமர உள்ளன. சற்று நேரத்திற்கு முன்பாக, மூன்று பயனாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, அவர்களின் முகங்களில் எல்லையற்ற மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. அவர்களில் ஒரு பெண் வீடு கிடைத்திருப்பது தமக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த ஏழைக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கிடைக்கச் செய்யும் திட்டம் உங்கள் அனைவரால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. தற்போது, ஏழை மக்கள் பக்கா வீடுகளைப் பெற்றுள்ளது அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. இது எனக்குள் புதிய உத்வேகத்தை  அளிப்பதுடன் எனது சக நாட்டு மக்களுக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற எனது தீர்மானத்தை வலுப்படுத்துகிறது.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***

(Release ID: 2116843)

TS/SV/KPG/KR


(Release ID: 2122363)