பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஒளி, ஞானம் மற்றும் கருணையின் கலங்கரை விளக்கமாக அவர் நினைவுகூரப்படுவார்: பிரதமர்

Posted On: 08 APR 2025 5:04PM by PIB Chennai

பிரம்ம குமாரிகளின் மதிப்புமிக்க ஆன்மீகத் தலைவர் தாதி ரத்தன் மோகினி அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒளி, ஞானம் மற்றும் கருணை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக  அவர் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.

பிரம்ம குமாரிகளின் உலகளாவிய இயக்கத்தில் அவரது சிறந்த தலைமையையும் அவர் பாராட்டினார். அவருடனான தமது தனிப்பட்ட கலந்துரையாடல்களை நினைவுகூர்ந்த பிரதமர், அவரது வாழ்க்கையும், போதனைகளும் அமைதியை நாடுபவர்களுக்கும், நமது சமுதாயத்தை மேம்படுத்த விரும்புவோருக்கும் பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"தாதி ரத்தன் மோகினி ஜி ஒரு உயர்ந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தார். அவர் ஒளி, ஞானம் மற்றும் கருணையின் கலங்கரை விளக்கமாக நினைவுகூரப்படுவார். ஆழ்ந்த நம்பிக்கை, எளிமை மற்றும் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கைப் பயணம் வரும் காலங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும். பிரம்ம குமாரிகளின் உலகளாவிய இயக்கத்திற்கு அவர் சிறந்த தலைமையை வழங்கினார். அவரது பணிவு, பொறுமை, சிந்தனையில் தெளிவு மற்றும் கருணை எப்போதும் தனித்து நிற்கும். அமைதியை நாடும் மற்றும் நமது சமூகத்தை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் அவர் தொடர்ந்து பாதையை ஒளிரச் செய்வார். அவருடனான எனது சந்திப்புகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்தத் துயரமான தருணத்தில் அவரது அபிமானிகளுடனும் பிரம்மா குமாரிகளின் உலகளாவிய இயக்கத்துடனும் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி."

***

(Release ID: 2120075)
TS/PKV/RR/KR/DL


(Release ID: 2120127) Visitor Counter : 27