பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் – விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் : மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பாசன இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 MAR 2025 4:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜல் சக்தி அமைச்சகத்தின் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் திட்டத்தின் கீழ், பீகாரில் கோசி மெச்சி  இடையேயான இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

6,282.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 2029 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றும் வகையில் பீகார் மாநிலத்துக்கு 3,652.56 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காக விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

கோசி மெச்சி இடையே பாசன இணைப்புத் திட்டத்தின் கீழ், கோசி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியை தற்போதுள்ள கிழக்கு கோசி பிரதான கால்வாயை  மறுவடிவமைத்து சீரமைப்பதன் மூலம் அம்மாநிலத்தில் அமைந்துள்ள மகாநந்தா படுகைக்கு நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்த உதவிடும்.

 

இந்தப் பாசன இணைப்புத் திட்டம், பீகாரில் அராரியா, பூர்னியா, கிஷன்கஞ்ச், கடிஹார் மாவட்டங்களில் காரீப் பருவத்தில் கூடுதலாக 2,10,516 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116177

 

***

SV/KPG/SG

 

 


(Release ID: 2116272) Visitor Counter : 54