WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025-ல் ஊடகவியலாளர்கள் பங்கேற்பதற்கான பதிவு தொடக்கம்

 Posted On: 26 MAR 2025 2:04PM |   Location: PIB Chennai

உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) மும்பையில் 2025 மே 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், உள்ளடக்கப் படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்க பதிவு செய்யலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க உள்ள ஊடக பிரதிநிதிகள் 2025 ஜனவரி 1 அன்று 18 வயது நிரம்பியவராகவோ அல்லது அதற்கு மேற்பட்டவராகவோ இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நிருபராகவோ, புகைப்படக் கலைஞராகவோ, ஒளிப்பதிவாளராகவோ அல்லது மின்னணு உள்ளடக்கப் படைப்பாளராகவோ இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகளை கொண்ட பகுதி நேர பத்திரிகையாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

இதற்கான பதிவு 2025 மார்ச் 26 அன்று தொடங்கி 2025 ஏப்ரல் 10 அன்று நிறைவடைகிறது. https://app.wavesindia.org/register/media என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளுக்கு அனுமதிச்சீட்டுகளை பெறுவதற்கான விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். இது குறித்து சந்தேகம் இருந்தால்  pibwaves.media[at]gmail[dot]com என்ற இணையமுகவரிக்கு  WAVES Media Accreditation Query’ என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115176

***

TS/IR/RR/KR


Release ID: (Release ID: 2115256)   |   Visitor Counter: 50