பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு குறைந்த செலவில் மருந்துகள் கிடைப்பதற்கான அர்ப்பணிப்பைப் பிரதமர் மீண்டும் உறுதி செய்தார்

Posted On: 07 MAR 2025 12:20PM by PIB Chennai

மக்கள் மருந்தக தினத்தையொட்டி, அனைத்து மக்களுக்கும் உயர்தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதிலும், ஆரோக்கியமான மற்றும் உடல்திறன் இந்தியாவை உறுதி செய்வதிலும் அரசின் அர்ப்பணிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில்  கூறியிருப்பதாவது:

"ஆரோக்கியமான மற்றும் உடல்திறன் இந்தியாவை உறுதி செய்து, மக்களுக்கு உயர்தரமான மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மக்கள் மருந்தக தினம்  பிரதிபலிக்கிறது. இந்தத் திசையில்  மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த காட்சியை இந்த இணைப்பு வழங்குகிறது..."

***

(Release ID: 2109008)

TS/PKV/AG/RJ


(Release ID: 2109140) Visitor Counter : 20