தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேவ்ஸ் காமிக் க்ரானிகல்ஸ்

Posted On: 24 FEB 2025 7:21PM by PIB Chennai

வேவ்ஸ் காமிக் க்ரானிகல்ஸ்படைப்பாற்றலின் உலகத்தை கட்டவிழ்த்து விடத் தயாராக உள்ளது, இது கதைசொல்லிகளுக்கு செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்தி அவர்களின் யோசனைகளை துடிப்பான காமிக்ஸாக மாற்றுவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.  முதலாவது உலக ஆடியோ விஷுவல் & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ் ) ஒரு பகுதியாக, இந்த சவால் பங்கேற்பாளர்களை டாஷ்டூன் ஸ்டுடியோ மூலம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய காமிக்ஸை உருவாக்கி, அவர்களின் கதைகளை டாஷ்டூன்  செல்பேசி செயலியில் காண்பிக்க அழைக்கிறது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய இணையம் மற்றும்  செல்பேசி சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த போட்டி பிப்ரவரி 15, 2025 நிலவரப்படி 774 பதிவுகளைப் பெற்றுள்ளது, இது டிஜிட்டல் படைப்பாற்றலுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது.

 

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட்  மாநாட்டு மையம் & ஜியோ வேர்ல்ட் கார்டன்ஸில் 2025 மே 1 முதல் 4 வரை திட்டமிடப்பட்டுள்ள வேவ்ஸ் உச்சிமாநாடு, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  துறையின் ஒருங்கிணைப்புக்குத் தயாராக உள்ள ஒரு தனித்துவமான மையம் மற்றும் பேசும் தளமாகும். இந்த நிகழ்வு ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும், இது உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  தொழில்துறையின் கவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், இந்திய  ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  துறையுடன் அதன் திறமையை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நான்கு அடித்தள தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது- ஒலிபரப்பு மற்றும் தகவலுடன் இணைந்த பொழுதுபோக்கு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி, டிஜிட்டல் மீடியா மற்றும் புத்தாக்கம் மற்றும் திரைப்படங்கள்.வேவ்ஸ் காமிக் க்ரானிகல்ஸ்

 டிஜிட்டல் மீடியா மற்றும் புத்தாக்க தூணின் ஒரு பகுதியாகும். இந்த தூண் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு போன்ற ஒழுங்குமுறை சவால்களையும் எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் நெறிமுறை உள்ளடக்க உருவாக்கம் மற்றும் பொறுப்பான டிஜிட்டல் நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105887

(Release ID: 2105887)

 

 

***


(Release ID: 2105985)