பிரதமர் அலுவலகம்
ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பொறுத்தவரை, சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார்: பிரதமர்
Posted On:
14 FEB 2025 8:12PM by PIB Chennai
ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மைகவ் இந்தியா வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது, சத்குரு ஜக்கி வாசுதேவ் @SadhguruJV எப்போதும் மிகவும் எழுச்சியூட்டும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை (பிப்ரவரி 15) காணுமாறு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்கள் #ExamWarriors மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.”
----
RB/DL
(Release ID: 2103422)
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada