தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய இசை பாரம்பரியத்தின் கொண்டாட்டம்:ஆகாஷ்வாணியும், கலாச்சார அமைச்சகமும் இணைந்து 'ஹர் காந்த் மே பாரத்' என்ற பாரம்பரிய இசைத் தொடரைத் தொடங்குகின்றன
Posted On:
02 FEB 2025 4:43PM by PIB Chennai
வசந்த பஞ்சமியின் புனிதமான நாளில், ஹர் காந்த் மே பாரத்' என்ற பாரம்பரிய இசைத் தொடரை ஆகாஷ்வாணி அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகமும், பொது சேவை ஒலிபரப்பாளரான ஆகாஷ்வாணியும் இணைந்து வழங்கும் இந்தத் தொடர் 2025 பிப்ரவரி 16 வரை தினமும் காலை 9:30 மணிக்கு இந்தியா முழுவதும் உள்ள 21 நிலையங்களில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபரப்பப்படும்.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு அருணீஷ் சாவ்லா, பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் திவேதி, ஆகாஷ்வாணியின் தலைமை இயக்குநர் டாக்டர் பிரக்யா பாலிவால் கவுர், கலாச்சார இணைச் செயலாளர் திருமதி அமீதா பிரசாத் சார்பாய் மற்றும் தூர்தர்ஷனின் தலைமை இயக்குநர் திருமதி கஞ்சன் பிரசாத் ஆகியோர் இசைத் தொடரைத் தொடங்கிவைத்தார்கள்.
ஆகாஷ்வாணி தலைமை இயக்குநர் டாக்டர் பிரக்யா பாலிவால் கவுர் தனது வரவேற்புரையில், 'ஹர் காந்த் மே பாரத்' தொடரின் கருத்துரு மற்றும் ஒலிபரப்பு அட்டவணையை அறிவித்தார். இந்தக் கூட்டு முயற்சி பலனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.திரு அருணீஷ் சாவ்லா மற்றும் ஸ்ரீ கௌரவ் திவேதி ஆகியோர் டிஜிட்டல் முறையில் தொடரைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர், இந்த ஒத்துழைப்பின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையின் நுணுக்க விவரங்களைப் பட்டியலிட்டார். கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளையும், தற்போதைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிகழ்த்தும் கலை வடிவங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அத்தகைய திட்டங்களில் அடுத்த தலைமுறையினரை ஈடுபடுத்துவது ஒரு தீர்வாக அமையும், என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098933
(Release ID: 2098933)
***
(Release ID: 2099105)
Visitor Counter : 29