நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 01 FEB 2025 1:28PM by PIB Chennai

வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில், வரி விகிதத்தில் முழுமையான மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வரி விதிப்பின் கீழ், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் (சிறப்பு விகித வருமானத்தை தவிர மாதத்திற்கு சராசரியாக ரூ. 1 லட்சம் வருமானம்) வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

 

புதிய வருமான வரிவிதிப்படி,

 

0-4 லட்சம் ரூபாய் வரை 0%

 

4-8 லட்சம் ரூபாய் வரை 5 சதவீதமும்

 

8-12 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதமும்

 

12-16 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதமும்

 

16-20 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும்

 

20- 24 லட்சம் ரூபாய் வரை 25 சதவீதமும்

 

24 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வருமானவரி விகிதம் இருக்கும்.

 

மாத சம்பளம் பெறுவோருக்கு ரூ. 75,000 நிலை கழிவிற்கு பிறகும் ரூ. 12 லட்சமாக இருக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வரி விதிப்பு விகித குறைப்பு காரணமாக வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத வகையில் வரிச்சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவது, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098406

***

PKV /GK /RJ/KR


(रिलीज़ आईडी: 2098607) आगंतुक पटल : 357
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam