நிதி அமைச்சகம்
அரசுப் பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அடல் சிந்தனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்
Posted On:
01 FEB 2025 1:09PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று, 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புதுமைகளை வளர்ப்பதற்கான பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தார்.
ஆர்வத்தையும் புதுமை உணர்வையும் வளர்ப்பதற்கும், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் ஐம்பதாயிரம் அடல் சிந்தனை ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்கவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வியைப் பொறுத்தவரை, 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கடந்த 10 ஆண்டுகளில் 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 1.35 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் பாடங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் நோக்கில், பள்ளி, உயர்கல்விக்கு டிஜிட்டல் வடிவ இந்திய மொழி புத்தகங்களை வழங்குவதற்காக இந்திய மொழி நூல்கள் (பாரதிய பாஷா புஸ்தக்) திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டுக்கான ஐந்து தேசிய உயர் திறன் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
ரூ.500 கோடி மொத்த செலவில் செயற்கை நுண்ணறிவுக் கல்விக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 2098380)
TS/PLM/RR/KR
************
(Release ID: 2098527)
Visitor Counter : 26
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam