நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகத்துக்கு உதவுதலை உறுதி செய்ய 2025-26 பட்ஜெட்டில் முன்னுரிமை: ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவு

Posted On: 01 FEB 2025 12:51PM by PIB Chennai

2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் வர்த்தகத்துக்கு உதவுவதை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பட்ஜெட் முன்மொழிவதாக அவர் தெரிவித்துள்ளார்.தன்படி, பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

 

2025 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக விநியோகங்களுக்கு, உள்ளீட்டு வரி வரவை மாற்றியமைக்கப்பட்ட கட்டண அடிப்படையில் உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர் செலுத்துவதற்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தனித்துவமான அடையாளக் குறியீட்டின் அடிப்படையில் தடம் அறிதல் மற்றும் பின் தொடர்தல் (டிராக் அண்ட் டிரேஸ் )மெக்கானிசத்தை செயல்படுத்த ஏற்பாடு

 

விநியோகஸ்தரின் வரிப் பொறுப்பைக் குறைப்பதற்காக, கடன் குறிப்பு தொடர்பாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவதற்கு ஏற்பாடு

 

மேல்முறையீட்டு ஆணையத்தில் எந்தவொரு வரி செலுத்தல் கோரிக்கையும் இல்லாமல் அபராதம் மட்டுமே கோரும் வழக்குகளில் மேல்முறையீடு செய்வதற்கு அபராதத் தொகையில் 10% முன் வைப்புத்தொகை கட்டாயம்.  

டிராக் அண்ட் டிரேஸ் மெக்கானிசம் தொடர்பான விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க ஏற்பாடு. 

 

சிஜிஎஸ்டி சட்டம், 2017-ன் அட்டவணை III-ன்படி, ஏற்றுமதிகள் அல்லது உள்நாட்டு கட்டணப் பகுதிக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எந்தவொரு நபருக்கும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லது ஒரு சுதந்திர வர்த்தக கிடங்கு மண்டல கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை வழங்குவது பொருட்களின் விநியோகமாகவோ அல்லது சேவைகளின் விநியோகமாகவோ கருதப்படாது. மேலும், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெற முடியாது. இது 01.7.2017 முதல் அமலுக்கு வரும்.

 

வரி தாக்கல் செய்வதற்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சேர்க்க பட்ஜெட்டில் பரிந்துரை.

 

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, இந்த மாற்றங்கள் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து அறிவிக்கப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098360   

***

TS/GK /RJ/KR


(Release ID: 2098510) Visitor Counter : 29