நிதி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.67,000 கோடியாக அதிகரிப்பு
Posted On:
01 FEB 2025 1:00PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஜல் ஜீவன் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.67,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கிராமப்புறங்களில் 15 கோடி குடும்பங்கள் அதாவது இந்திய ஊரக மக்கள்தொகையில் 80 சதவீத்தினர் ஜல் ஜீவன் திட்டம் மூலம் பயனடைந்துள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதில் அடுத்த 3 ஆண்டுகளில் 100 சதவீதத்தை எட்டுவதே இலக்கு என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தில் நிலைத்தன்மை, மக்களை மையமாகக் கொண்ட சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று திருமதி சீதாராமன் தெரிவித்தார்.
*****
(Release ID: 2098368)
TS/PLM/KR
(Release ID: 2098445)
Visitor Counter : 26
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam