நிதி அமைச்சகம்
இந்திய அஞ்சல் துறை கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக செயல்படும்: பட்ஜெட் 2025-26
Posted On:
01 FEB 2025 12:57PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய அஞ்சல் துறை கிராமப்புறங்களில் 1.5 லட்சம் அஞ்சலகங்களுடன் விரிவான சேவையை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். 2.4 லட்சம் அஞ்சல் சேவகர்கள் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இத்துறை கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் உந்துசக்தியாக செயல்படுகிறது என அவர் கூறினார்.
முக்கியமான இடங்களில் கிராம சமூக மையங்களை அமைத்தல், நிறுவன ரீதியிலான கணக்கு சேவைகள் நேரடி பணப் பரிமாற்றப் பயன், பரிவர்த்தனைக்கான ஈஎம்ஐ, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் சேவைகள், காப்பீடு மற்றும் டிஜிட்டல் சேவைகளில் உதவுதல் ஆகியவற்றுடன் அஞ்சல் துறை செயல்பாடுகள் விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த சேவைகள் விரிவாக்கம் விஷ்வகர்மாக்கள், புதிய தொழில் முனைவோர் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும்.
***
(Release ID: 2098365)
TS/PKV/RR/KR
(Release ID: 2098427)
Visitor Counter : 30
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Nepali
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam