நிதி அமைச்சகம்
தொழில்துறை சரக்குகளுக்கான ஏழு சுங்க வரி விகிதங்களை நீக்குவதற்கு பட்ஜெட் 2025-26-ல் முன்மொழியப்பட்டுள்ளது
Posted On:
01 FEB 2025 12:55PM by PIB Chennai
மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
மருந்துகள்/மருந்துகள் இறக்குமதி மீதான நிவாரணம்
குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்களில், நோயாளிகளுக்கு, குறிப்பாக புற்றுநோய், அரிதான நோய்கள் மற்றும் பிற கடுமையான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்ஜெட் பெரிய நிவாரணத்தை அளிக்கிறது. 36 உயிர்காக்கும் மருந்துகளை அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்க பட்ஜெட் முன்மொழிகிறது. 5% சலுகை அளிக்கப்படும் சுங்க வரிப் பட்டியலில் 6 உயிர்காக்கும் மருந்துகளை சேர்க்க பட்ஜெட் முன்மொழிகிறது. இந்த மருந்துகளின் மொத்த மருந்து உற்பத்திக்கும் முறையே முழு விலக்கு மற்றும் வரிச் சலுகை வழஙப்படும்.
மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் நோயாளி உதவித் திட்டங்களின் கீழ் மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் அந்தக் குறிப்பிடப்பட்ட மருந்துகள் அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகின்றன.. 13 புதிய நோயாளி உதவித் திட்டங்களுடன் மேலும் 37 மருந்துகளையும் இப்பட்டியலில் சேர்க்க பட்ஜெட் முன்மொழிகிறது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான ஆதரவு
மின்னணு வாகன பேட்டரி உற்பத்திக்கான 35 கூடுதல் மூலதன பொருட்களையும், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கான 28 கூடுதல் மூலதன பொருட்களையும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியலில் சேர்க்க பட்ஜெட் முன்மொழிகிறது. "இது மொபைல் போன்கள் மற்றும் மின்சார வாகனங்கள் இரண்டிற்கும் லித்தியம்-அயன் பேட்டரியின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்" என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோபால்ட் பவுடர் மற்றும் கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரியின் கழிவுகள், ஈயம், துத்தநாகம் மற்றும் மேலும் 12 முக்கியமான தாதுக்கள் மீதான அடிப்படை சுங்க வரியை முழுமையாக நீக்குவதற்கு பட்ஜெட் முன்மொழிகிறது. இது இந்தியாவில் உற்பத்திக்கான அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தவும், நமது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவும் என்று நிதியமைச்சர் கூறினார்.
2024 ஜூலை பட்ஜெட்டில் அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட 25 முக்கியமான தாதுக்களுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098364
***
TS/IR/AG/KR
(Release ID: 2098423)
Visitor Counter : 29
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Nepali
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam