நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரம் மற்றும் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி காரணமாக தொழில்துறையின் வளர்ச்சி 2025-26-ம் நிதியாண்டில் 6.2 சதவீதமாக வளரும்: பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 31 JAN 2025 2:07PM by PIB Chennai

நாட்டின் மின்சாரம் மற்றும் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தி தொடர்பான முதல்கட்ட மதிப்பீடுகளின்படி தொழில்துறையின் வளர்ச்சி 2024-25-ம் நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருாளதார ஆய்வறிக்கையினை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல், புதிய கண்டுபிடிப்புகள், சிறு அளவிலான உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தல் ஆகியவை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட், எஃகு, மூலதனப் பொருட்கள், வாகனங்கள், மின்னணு சானங்கள், ஜவுளி, மருந்துகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த 7 துறைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097906

------

PKV/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2098288) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam