நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-25 நிதியாண்டில் பௌதீக நிலையிலான இணைப்புத் துறைகளில் திறன் சேர்க்கை நிச்சயமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 1:57PM by PIB Chennai

2025 நிதியாண்டில் பௌதீக நிலையிலான இணைப்புத் துறைகளில் திறன் சேர்க்கை தொடர்ந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. வரும் பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த லட்சியங்களுக்கு உள்கட்டமைப்பில் கணிசமான முதலீடு தேவைப்படுகிறது என்று மத்திய நிதி மற்றும்  பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே துறை:

ரயில்வே  இணைப்பின்  விரிவாக்கத்தின் முன்னேற்றம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடக்கூடிய மட்டங்களில் இருந்தது, அதே நேரத்தில் ரயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ரயில் நிலைய உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துதல்  போன்ற பணிகள் ரயில்வே துறையில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தியுள்ளன. இந்திய ரயில்வே தனது பரந்த  வலையமைப்பில் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அதன் சமிக்ஞை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்கி வருகிறது.  இயந்திர சமிக்ஞை, கவச்  தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்புமுறை,  மின்னணு இணைப்பு, உள்ளிட்டவை இதில் அடங்கும்.

துறைமுகங்கள், கப்பல்  போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிகள்:

நிதியாண்டு 25 இல் துறைமுகத் திறன் கணிசமாக  முன்னேற்றமடைந்தது, செயல்பாட்டு செயல்திறனில் மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது மற்றும் முக்கிய துறைமுகங்களில் சராசரி கொள்கலன் சென்று திரும்பும் நேரத்தை நிதியாண்டு 24 இல் இருந்து வந்த 48.1 மணிநேரத்திலிருந்து நிதியாண்டு 25 (ஏப்ரல்-நவம்பர்) இல் 30.4 மணிநேரமாக குறைத்தது.

 

சாலைப் போக்குவரத்து:

இந்தியாவில் மொத்தம் 63.4 லட்சம் கி.மீ சாலை  இணைப்பு உள்ளது, இதில் 146,195 கி.மீ தேசிய நெடுஞ்சாலை  இணைப்பில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை  இணைப்பு, சாலை போக்குவரத்து வலையமைப்பின் முக்கிய முதுகெலும்பாக உள்ளது, ஏனெனில் இது மொத்த சாலை வலையமைப்பில் 2 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த சாலை சரக்குப் போக்குவரத்தில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

 

சிவில் விமானப் போக்குவரத்து:

இந்திய விமான நிலைய ஆணையம் உட்பட விமான நிலையங்களை இயக்குபவர்கள் மற்றும் உருவாக்கி வளர்த்தெடுப்பவர்கள் நிதியாண்டு 2020 முதல் நிதியாண்டு 2025 வரை ரூ.91,000 கோடிக்கு மேல் மூலதன செலவின திட்டத்தை பின்பற்றி வருகின்றனர். இதில் சுமார் 91 சதவீதம் நவம்பர் 2024 க்குள் எட்டப்பட்டுள்ளது.

 

டிஜிட்டல் இணைப்பு:

டிஜிட்டல் இணைப்பு, இந்த நிதியாண்டில் டிஜிட்டல் உள்ளடக்கம், தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, இவை அனைத்தும் டிஜிட்டல் இந்தியாவுக்கான அரசின் தொலைநோக்குப்  பார்வைக்கு ஏற்ப உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097895  

 

***

TS/RB/DL


(Release ID: 2098233) Visitor Counter : 12