WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

76-ல் 76: வேவ்ஸ் படக்கதை படைப்பாளர் சாம்பியன்ஷிப்புடன் நாட்டின் படைப்பாற்றல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது

 Posted On: 29 JAN 2025 6:24PM |   Location: PIB Chennai

76 வது குடியரசு தினத்தின் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய படக்கதை சங்கத்துடன் இணைந்து வேவ்ஸ் படக்கதை படைப்பாளர் சாம்பியன்ஷிப்பின் 76 அரையிறுதிப் போட்டியாளர்களை அறிவித்துள்ளது.

இந்த மைல்கல் முயற்சி இந்திய படக்கதையின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. நாடு முழுவதிலுமிருந்து படைப்பாளர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. 20 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களைச் சேர்ந்த படைப்பாளிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்வில் மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களிலிருந்தும், ஆனந்த், பேதுல், கல்கா, சமஸ்திபூர் போன்ற சிறிய நகரங்களிலிருந்தும், குவஹாத்தி, இம்பால் போன்ற வடகிழக்கு நகரங்களிலிருந்தும் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கான சாம்பியன்ஷிப்பின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

10 முதல் 49 வயதுக்குட்பட்ட அரையிறுதிப் போட்டியாளர்களில் 40 பேர் அமைப்புசாராதவர்கள், 30 பேர்  தொழில்முறையினர் ஆவர்.

***

TS/IR/AG/DL


Release ID: (Release ID: 2097430)   |   Visitor Counter: 61