தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சி
Posted On:
21 JAN 2025 8:11PM by PIB Chennai
பாரதீய நியாயச் சட்டம் 2023, பாரதீய நகரிக் சுரக்ஷா அதினியம் 2023 மற்றும் பாரதீய சாட்சியச் சட்டம் 2023 ஆகிய இந்தியாவின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் விரிவான மற்றும் புரிந்துகொள்ளகூடிய எளிதான விளக்கம், திரிவேணி மார்க்கில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவர்ச்சிகரமான டிஜிட்டல் கண்காட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், இந்தக் கண்காட்சியில் இந்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கொள்கைகள், சட்டங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்கள் அனைத்தும் அனமார்ஃபிக் சுவர்கள், எல்.இ.டி தொலைக்காட்சி திரைகள், எல்.இ.டி சுவர்கள் மற்றும் ஹாலோகிராஃபிக் சிலிண்டர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. புதிய சட்டங்கள் நீதி மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நீதி மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட கட்டமைப்பில் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒலி-காட்சி ஊடகங்கள் மூலம் கண்காட்சி தெளிவாக விளக்குகிறது.
புதிய சட்டங்கள், இந்தியாவின் நீதி அமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், நவீன சமூகத்தின் தேவைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று புதிய சட்டங்களும் இந்தியாவின் நீதித்துறை அமைப்பில் ஒரு வரலாற்று மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சைபர் கிரைம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ள ஒரு புதிய கட்டமைப்பை இவை அறிமுகப்படுத்துகின்றன. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் உறுதி செய்கின்றன.
TS/BR/KR
***
(Release ID: 2095006)
Visitor Counter : 14
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam