தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகில இந்திய வானொலி & தூர்தர்ஷன் தயாரித்த மகா கும்பமேளா பாடல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு எஸ். அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார்

Posted On: 08 JAN 2025 8:28PM by PIB Chennai

மகா கும்பமேளா 2025-க்காக தூர்தர்ஷன் தயாரித்த "மகாகும்ப் ஹை" என்ற கருப்பொருள் பாடலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு எஸ். அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் நடைபெற்ற நிகழ்வின் போது வெளியிட்டார்.

புகழ்பெற்ற பத்மஸ்ரீ திரு கைலாஷ் கெர் பாடிய, இந்தப் பாடல் பக்தி, கொண்டாட்டம் மற்றும் புகழ்பெற்ற மகா கும்பமேளாவின் துடிப்பான கலாச்சாரத்தின்  சாரத்தை உள்ளடக்கியதாக  இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்  திரு ஆலோக் ஸ்ரீவஸ்தவின் ஆழமான பாடல் வரிகள் மற்றும் திரு க்ஷிதிஜ் தாரே இசையமைத்த ஆன்மாவைத் தூண்டும் இசை ஆகியன மகா கும்பமேளாவின் அம்சங்களான நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பண்டிகையின் சங்கமத்தை அழகாக எடுத்துக் காட்டுகின்றன.

பாரம்பரிய மெல்லிசைகள் மற்றும் நவீன ஏற்பாடுகளின் இணக்கமான கலவையான "மகாகும்ப் ஹை" என்பது இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மகா கும்பமேளாவின் நிலையான முக்கியத்துவத்திற்கான இதயப்பூர்வமான அஞ்சலியாகும்.

"மகாகும்ப் ஹை" பாடலின் அதிகாரப்பூர்வ இசை காணொலியை, இப்போது தூர்தர்ஷன் மற்றும் அதன் டிஜிட்டல் தளங்களில் காணலாம்.

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆகாசவாணியின் சிறப்புத் தொகுப்பையும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் வெளியிட்டார். இந்த தனித்துவமான பாடல் மகா கும்பமேளாவின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை இசை மற்றும் பாடல் வரிகளின் இணக்கமான கலவையின் மூலம் ஒலிக்கிறது.

பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. திரு சந்தோஷ் நஹர் மற்றும் திரு ரத்தன் பிரசன்னாவின் இசையில், திரு ரத்தன் பிரசன்னாவின் ஆத்மார்த்தமான குரலில் பாடல் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. திரு அபினய் ஸ்ரீவஸ்தவா எழுதிய எழுச்சியூட்டும் பாடல் வரிகள், தெய்வீகத்துடன் ஆன்மீக தொடர்பை அழகாக இழைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091289  

***

(Release ID: 2091289)

TS/BR/KR


(Release ID: 2091379) Visitor Counter : 18