பிரதமர் அலுவலகம்
2024 ஃபிடே மகளிர் உலக விரைவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்குப் பிரதமர் வாழ்த்து
Posted On:
29 DEC 2024 3:34PM by PIB Chennai
2024 ஃபிடே மகளிர் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார் . அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒன்று என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
"2024 ஃபிடே (FIDE) மகளிர் உலக ரேபிட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஹம்பி கொனேருவுக்கு ( @humpy_koneru ) வாழ்த்துகள்! அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஏனெனில் இது அவரது இரண்டாவது உலக ரேபிட் சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதன் மூலம் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்."
***
PLM/KV
(Release ID: 2088722)
Visitor Counter : 28
Read this release in:
Kannada
,
Malayalam
,
Assamese
,
Manipuri
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu