பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல், மன உறுதி நினைவு கூரப்படும் :பிரதமர்

प्रविष्टि तिथि: 19 DEC 2024 6:17PM by PIB Chennai

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

இன்று, கோவா விடுதலையான தினம். இத்தினத்தில், விடுதலைக்காக தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சலையும் மன உறுதியையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் வீரம் கோவாவின் முன்னேற்றத்திற்காகவும், மாநில மக்களின் வளமைக்காகவும் தொடர்ந்து பணியாற்ற எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

----

TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2086262) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam