பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை வெளிப்படுத்திய இந்தியக் குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 10 DEC 2024 8:19PM by PIB Chennai

கோலாலம்பூரில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை வெளிப்படுத்திய இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

:

"கோலாலம்பூரில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனுக்காக நமது இந்தியக் குழுவினருக்கு வாழ்த்துகள்! நமது திறமையான விளையாட்டு வீரர்கள் 55 பதக்கங்களை வென்று நமது தேசத்திற்கு அளப்பரிய பெருமையை சேர்த்துள்ளனர். இது விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாக மாறியுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை,ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.”

 

 

***

 

(Release ID: 2082942)

TS/BR/KR


(रिलीज़ आईडी: 2083111) आगंतुक पटल : 87
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Manipuri , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Malayalam