பிரதமர் அலுவலகம்
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இந்தத் திருவிழாவிற்கு வருகை தந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்குமாறு குடிமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
Posted On:
05 DEC 2024 11:10AM by PIB Chennai
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவைப் பகிர்ந்துகொண்டு, பிரதமர் குறிப்பிட்டதாவது:
"தற்போது நடைபெற்று வரும் ஹார்ன்பில் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள், 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த உயிர் துடிப்பான திருவிழாவை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு திருவிழாவின் போது கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு நான் சென்றது குறித்த இனிமையான நினைவுகள் எனக்கு உள்ளன, மற்றவர்கள் இதைப் பார்வையிடுமாறும், நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.”
***
(Release ID: 2080938)
TS/BR/RR
(Release ID: 2080973)
Visitor Counter : 30
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam