பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தில் 186 மெகாவாட் திறன் கொண்ட டாட்டோ-I நீர் மின் திட்டத்தை ரூ.1750 கோடி செலவில் நிர்மாணிப்பதற்கான முதலீட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 NOV 2024 8:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் Tato-I  நீர் மின் திட்டத்தைக்  கட்ட ரூ.1750 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட காலம் 50 மாதங்கள்.

186 மெகாவாட் (3 x 62 மெகாவாட்) நிறுவு திறன் கொண்ட திட்டம் 802 மில்லியன் யூனிட்   மின்சாரத்தை உற்பத்தி செய்யும். திட்டத்தின் மூலம்  உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மின் விநியோக நிலையை மேம்படுத்த உதவுவதோடு, தேசிய கட்டத்தை சமநிலைப்படுத்தவும் உதவும்.

நார்த் ஈஸ்டர்ன் எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம்¸ அருணாச்சல பிரதேச அரசு இடையேயான கூட்டு நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.  சாலைகள், பாலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய டிரான்ஸ்மிஷன் லைன் கட்டுமானத்திற்கான பட்ஜெட் ஆதரவாக ரூ.77.37 கோடியை இந்திய அரசு வழங்க வேண்டும்.

மாநிலம் 12% இலவச மின்சாரம் மற்றும் மற்றொரு 1% உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதிக்கு மேலும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு பயனளிக்கும்.

******

PKV/DL


(Release ID: 2079497)